சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள குடியரசு தலைவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கவுள்ளார் என்று சட்டப் பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி போன்றவை சட்டப்பேரவையில் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு விழாவிற்கு இந்திய குடியரசு தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். மேலும் ஆளுநர் மற்றும் முதல்வர் மு.கஸ்டாலின் போன்றோரும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளார்கள். இதனையடுத்து இந்திய குடியரசு தலைவர் சட்டப் பேரவை மண்டபத்தில் முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்கவுள்ளார்.
இந்த தகவலை சட்டப்பேரவையின் தலைவரான மு.அப்பாவு பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்த பின் வசந்த மண்டபத்தில் அனைத்து தலைவர்களுக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.