Categories
உலக செய்திகள்

நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி…. காணொளி வாயிலாக மட்டுமே நடைபெறும்…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

நடப்பாண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளதாக அதனை வழங்கும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ளதாக ஸ்வீடன் தலைநகரிலுள்ள நோபல் அறக்கட்டளை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாவது, தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு சென்றாண்டு நோபல் பரிசு விழா நடந்தது போன்றே தற்போதும் பரிசு வழங்கும் விழா மிகவும் எளிமையான முறையில் காணொளி வாயிலாகவே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எவரெல்லாம் நோபல் பரிசினை வென்றார்களோ அவர்கள் தங்களது சொந்த நாட்டில் இருந்தபடியே விருதினை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |