Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ராக்சாம்பாளையத்தில் ராசு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வன் என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து கமலா என்ற மனைவி இருக்கின்றார். இதில் செல்வன்-கமலா இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வனிடம் கோபித்துக்கொண்டு கமலா தனது 5 வயது மகனுடன் நத்தக்காட்டுவலசில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து செல்வன் தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார்.

அதன்பின் வெள்ளோடு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வன் செல்வதாக தனது தாய் பழனியம்மாளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் செல்வன் வீடு திருமபவில்லை. இந்நிலையில் மணக்காட்டுத்தோட்டம் என்ற பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் செல்வன் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வனை கொலை செய்தவர்கள் யார்..? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |