Categories
உலக செய்திகள்

ஆண்களுக்கான அழகு போட்டி….வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் பெண்கள்….. பிரபல நாட்டில் நடைபெறும் ருசிகர சம்பவம்….!!

நைஜீரியாவில் பாரம்பரிய மிக்க ஆண்களுக்கான அழகு போட்டி நடைபெற்றதில் வெற்றியாளர்களை பெண் நடுவர்கள் தேர்வு செய்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க கேரேவொல் எனப்படும் ஆண்களுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் பல ஆண்கள் தங்கள் முகங்களில் வர்ணங்கள் பூசியும் நடனமாடியும் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெறும் ஆண்களை பெண் நடுவர்களே தேர்வு செய்வர்.

இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் பெண்களை கவரும் வகையில் மணிக்கணக்கில் நடனமாட வேண்டும். மேலும் தேர்வு செய்யப்படும் ஆண்கள் காதலராகவோ அல்லது கணவராகவும் இருப்பதற்கு பொருத்தமானவராக கருதப்படுவார். நைஜீரியாவில் மழைக் கால முடிவில் நடத்தப்படும் இந்த போட்டி பழங்காலம் தொட்டே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |