Categories
உலக செய்திகள்

பரீட்சை எழுத வந்தோம்…. துப்பாக்கி முனையில் கடத்தல்…. அச்சத்தில் பெற்றோர்கள்….!!

பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பள்ளி மாணவர்களை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டில் கட்டுனா மாநிலத்தில் இருக்கும் பெத்தேல் பாப்ஸ்டிக் என்ற பள்ளியில் நடைபெற்ற பரீட்சையில் பங்கேற்பதற்காக மாணவர்கள் வந்திருந்தனர். இதனையடுத்து பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டவர்களில் ஒரு ஆசிரியை மற்றும் 26 மாணவர்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 150 மாணவ மாணவிகள் இன்னும் விடுவிக்கப்படாததால் அவர்களை மீட்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வடமேற்கு நைஜீரியாவில் பணயக் கைதியாக பள்ளி மாணவர்கள் கடத்தி பின் விடுதலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |