நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத்துலயே பெரிய தொகுதிக்கு எம்.எல். ஏ. வாக இருந்துட்டென், எம்.பி. யா. இருந்துட்டேன், இந்தியாவுக்கே மந்திரியா இருந்துட்டேன். இப்போ குடும்ப சூழ்நிலை, என்னோட குழந்தை சூழ்நிலை.
அமெரிக்காவில் இருந்து டிரீட்மென்ட் எடுத்துக்கணும். அவன் கூட தொடர்ந்து நாங்க இருக்கணும். பகலில் என் மனைவி பார்த்துப்பாங்க, இரவில் நான் பார்த்துபேன். அந்த மாதிரி சூழ்நிலையில் மக்கள் பணியாற்ற அந்த வாய்ப்பு ரொம்ப குறைவு.
சினிமா துறையிலையும் நிறைய படங்கள், வருஷத்துக்கு பத்து படங்கள் கேக்குறாங்க. ஆனால் நான் படம் ஒத்துக்கிறது இல்ல. நம்ம தொடர்பு விட்டுவிட கூடாது என்பதற்க்காக வருஷத்துக்கு ஒரு படம் மட்டும்தான் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.
திமுக ஆட்சி நல்லா இருக்குன்னு தான் மக்கள் சொல்றாங்க. நான் வந்து அரசியலையே இல்லையே அரசியலை விட்டு விலகி ஏழு வருஷம் ஆச்சு. நான் சாகுற வரைக்கும் எனக்கு அரசியல் குரு கலைஞர் தான், சினிமா குரு பாரதிராஜா தான் என தெரிவித்தார்.