Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இரவு தூக்கம் வரமாட்டேங்குதா”…? இந்த பழத்தை சாப்பிடுங்க… நல்லா தூக்கம் வரும்..!!

திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும்.

குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை பழத்தை அதிக அளவில் உட்கொள்வது நல்லது. திராட்சை பழத்தை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழங்களை சாப்பிடுவதால் குணமாகும்.

Categories

Tech |