புதுவையில் இரவு நேர பொதுமுடக்கம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசாங்கங்கள் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் கொரோனா காரணமாக புதுச்சேரியில் போடப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடற்கரை சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் பொதுமக்கள் வழக்கம் போல செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல்கள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் அரசு அனுமதித்த நேரத்தில் இயக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.