Categories
லைப் ஸ்டைல்

“இரவு நாம் காணும் கனவிற்கு பின்னால் எவ்வளவு அர்த்தமுள்ளது தெரியுமா”…? நீங்களே தெரிஞ்சுக்கோங்க..!!

இரவில் நாம் தூங்குவதற்கு பிறகு நம் கனவில் வரும் கதைகளுக்கு இத்தனை காரணங்கள் உள்ளதா? என்னென்ன என்பதை இதில் பார்ப்போம்.

மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டிலும், இரவில் தூங்கிய பிறகு தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதிலும் இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்னென்ன அர்த்தங்கள் இருக்கின்றது தெரியுமா? இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனை வெற்றிகரமாக முடிய போகிறது என பொருள். இறந்து போனவர்கள் தாய் கனவில் வந்தால் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என பொருள்.

இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவது போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க போகிறீர்கள் என அர்த்தம். அவர்களுடன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் செல்வ செழிப்பு ஏற்படப்போகிறது என அர்த்தம். உங்களிடம் பேசுவது போல் கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என அர்த்தம். நம்மை ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால் நன்மைகள் ஏற்பட போகிறது என அர்த்தம். அழுவது போல் கனவு கண்டால் அது நல்லதல்ல.

உடனே கோயிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நமது ஆயுள் கூடுகிறது என அர்த்தம். நமக்கு வேண்டப்பட்ட யாராவது கனவில் இறந்து விட்டது போல் தோன்றினால் துன்பங்கள் விலக போவது என அர்த்தம். நண்பர்கள் இறந்து போனது போல் கனவு வந்தால் கூடிய விரைவில் நற்செய்தி வரப்போகிறது என அர்த்தம். இளம் மனைவி இறந்து போவது போல் கனவு கண்டால் மனைவிக்கு இரட்டை குழந்தை பிறக்கப்போகிறது என அர்த்தம். நாம் அனைவரும் நாள்தோறும் கனவு காண்போம். இதற்கு இவ்வளவு அர்த்தங்கள் உள்ளது. கனவுக்கு நம் வாழ்வில் எப்போதும் தனி இடமுண்டு.

Categories

Tech |