நீட் தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவனுக்கு கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். சுந்தர் 50,000 ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2021-2022 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்றவர் அரவிந்த் ரகுநாத், இவர் பாரதிதாசனார் நீட் அகாடமியில் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்றதன் மூலமாக தற்போது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இதனை அடுத்து பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை கல்வி குழுமத்தின் தலைவர் எஸ். சுந்தர் வழங்கியுள்ளார். மேலும் கல்வி குழுமத்தின் இயக்குனர்கள் மாணவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.