Categories
உலக செய்திகள்

யார் இவங்களா திறந்துவிட்டது….? தப்பியோடிய கைதிகள்…. தேடும் பணியில் பாதுகாப்பு படையினர்….!!

சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் கால்நடைகளை கடத்துகின்றனர். குறிப்பாக நைஜீரியா நாட்டில் உள்ள ஒயோ மாகாணத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு பயங்கரவாத செயல்கள், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த சிறைச்சாலையில் நேற்று துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்மக்கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.

இதனை அடுத்து அவர்கள் அங்கிருந்த சிறைக்காவலர்களை தாக்கியுள்ளனர். மேலும் சிறைச்சாலையில் இருந்து 800 கைதிகளை அந்தக் கும்பல் விடுதலை செய்துள்ளது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது அதில் 262 பேரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். இருப்பினும் மீதியுள்ள 575 பேரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Categories

Tech |