நடிகை நிகிலா விமல் கேரளாவின் சிறப்பு வாய்ந்த சிங்கம் மாதத்தை வரவேற்கும் விதமாக தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மலையாள நடிகையான நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், கிடாரி போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார். கடந்த வருடம் வெளியான தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு தற்போது முன்னேறி விட்டார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள தனது வீட்டில் இருக்கும் நிகிலா விமல், கேரளத்தின் சிறப்புவாய்ந்த சிங்கத்தை வரவேற்க தயாராகி, அழகான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் எப்படி சித்திரை விஷீ மற்றும் ஓணம் பண்டிகை போன்றவற்றை வரவேற்பார்களோ அதேபோல கேரள மக்களுக்கு ரொம்பவே சிறப்பான ஒன்றுதான் சிங்கம் மாதம். அதாவது மழைக்காலம் முடிந்து அறுவடை தொடங்கும் மாதம். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்க உள்ள இந்த மாதத்தை வரவேற்கும் விதமாக நவீன உடை அணிந்து மல்லிகை பூக்களுடன் காத்திருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நிகிலா விமல்.