Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்பட்ட அதிகாரி…. ஆவணங்கள் பறிமுதல்…. இயக்குனரின் உத்தரவு….!!

நில அளவை பதிவேடு உதவி இயக்குனர் சுப்ரமணி நில அளவையர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சேகர் தனது கிராமத்தில் இருக்கும் 3 வீட்டு மனைகளை அளவிடுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவரிடம் நில அளவையராக பணியாற்றிக் கொண்டிருந்த பாலாஜி என்பவர் 8000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இது பற்றி சேகர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் ரசாயனம் தடவிய 8 ஆயிரம் ரூபாயை பாலாஜியிடம் கொடுக்குமாறு சேகரிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். பின்னர் சேகரிடம் நில அளவையர் பாலாஜி பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியதில் 22 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக அவரது வீட்டின் நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்ட ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் படி நில அளவை பதிவேடு உதவி இயக்குனர் சுப்பிரமணி நில அளவையர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |