சிலியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலியா நாட்டில் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலிருக்கும் புவியியல் ஆய்வு மையம் சிலியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 9.58 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தினால் சிலியாவில் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்கின்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிலியாவிலிருக்கும் கன்ஸ்டிடுசியான் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.