கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
பிஜூ தீவின் தெற்கு பகுதயில் 537.93 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று முன்தினம் மாலை 6.47 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோளில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அங்குள்ள மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.