Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட நிலத்தகராறு…. விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சின்னசோரகை மலையன்வளவு பகுதியில் பொன்னுவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் விவசாயியான இவர் நங்கவள்ளி ஒன்றிய முன்னாள் கவுன்சிலராகவும், தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நிலத்தகராறு காரணமாக இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் பெருமாள், அவரது மனைவி நாகம்மாள், மகன் பார்த்திபன் ஆகிய 3 பேரும் பொன்னுவேலை கல் மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் பலத்தகாயமடைந்த பொன்னுவேலை உடனடியாக மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து குணமடைந்து பொன்னுவேல் வீட்டிற்கு திரும்பினார். அதன்பின் மீண்டும் பொன்னுவேலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பொன்னுவேல் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி பொன்னுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஏற்கனவே பெருமாள், நாகம்மாள், பார்த்திபன் ஆகிய 3 பேர் மீது அடிதடி வழக்குப்பதிவு செய்த நங்கவள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொன்னுவேல் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |