கேரளாவில் சிக்கியவர்களுக்கு புதிய நிலம் வழங்கப்படும் அரசு செலவில் வீடு கட்டித்தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துருக்கிறார்.
மூணாறு அருகே ராஜ மலைப்பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோரும், 40-க்கும் மேற்பட்ட வீடுகளும் மண்ணுக்குள் புகுந்தன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 55 சடலங்கள் மீட்கப்பட்டன. 18-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் சிலரின் உடல்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவ இடத்தில் இன்று மாநில ஆளுநர் ஆரிவ் முகமதுகான் முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் மீட்பு பணியை பார்வையிட்டனர்.
மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராய் விஜயன் மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதி அளித்தார். அதேபோல நிலச்சரிவில் இறந்த உயிரோடு மீட்கபட்டோரின் குழந்தைகளது கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.