இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜபுரம் பகுதியை சேர்ந்த மூவேந்தன் என்பவர் (48) நெய்விளக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவர் இரவு பணி முடிந்தவுடன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குரவப்புலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார் .
இதனால் பலத்த காயமடைந்த இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த விபத்து தொடர்பான புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.