மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நம்பிராஜபுரம் இந்திரா நகரில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் காட்டுப்புத்தூர் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் காட்டுப்புத்தூர் அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அஜித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து அஜித் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கும், சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அரியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.