மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 2 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம் நகரில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், அபி என்ற மகளும் உள்ளனர். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமியின் அக்கா மகனான வினோத் என்பவரின் மோட்டார் சைக்கிளில் அபி அவருடன் சென்றுள்ளனர். அப்போது பால வேலை நடக்கின்ற பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் திடிரென நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்துள்ளனர்.
இதில் அபிக்கு பலத்த காயமும் மற்றும் வினோத்துக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.