Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

நிலைவாசல் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடக்குவாசல் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் 2-ஆம் வகுப்பு படிக்கும் பிரீத்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ப்ரீத்தி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் பொருத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலைவாசலில் ஏறி விளையாடியுள்ளார்.

இதில் திடீரென நிலைவாசல் சரிந்து சிறுமியின் மேல் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த ப்ரீத்தி அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடி வந்து ப்ரீத்தியை உடனடியாக மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ப்ரீத்தி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |