Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் 8ஆம் தேதி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” – மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா

கன மழையின் காரணமாக நீலகிரியில் வரும் 8 ஆம் தேதி வரை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

நீலகிரியில் எட்டாம் தேதி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளதாகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளர். நீலகிரியில்  மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் இன்னசன்ட்  திவ்யா நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த  அவர் இன்றைய தேதியில் 9  நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 565 பேர் தங்கியுள்ளனர் என்றும். இதுவரை 283 அபாயகரமான  பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |