Categories
தேசிய செய்திகள்

நிலம் கையகப்படுத்துவது தமிழர்களிடம்… ஆனால் வேலை மட்டும் அவங்களுக்கா?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!!

கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், பெங்களூருவுக்கு செல்லும் சாட்டிலைட் சாலை அமைக்கவும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டத்தில் பங்கேற்று தன் ஆதரவை தெரிவித்தார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த பகுதியில் 500 ஏக்கர் கையகப்படுத்துவதாக கூறிய அரசு, இப்போது 3,800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக தெரிகிறது. நிலங்களை மட்டும் தமிழர்களிடம் கையகப்படுத்தி விட்டு வேறு மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவதா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Categories

Tech |