நிலத்தகராறு காலத்தில் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தேவேந்திரன் அவரது மனைவி அய்யம்மாள், மகன்கள் மணிகண்டன், ராமசாமி ஆகியோர் சேர்ந்து சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமி, மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் தேவேந்திரன் மற்றும் அவரின் மனைவி அய்யம்மாள் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.