Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு வாங்கி தாங்க…. அலுவலகத்தில் திரண்ட உரிமையாளர்கள்…. கலெக்டருக்கு மனு….!!

நிலம் வாங்கிய உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் விரிவாக்கப் பணிக்காக 236 நபர்களிடமிருந்து தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கங்களில் இருக்கும் 22 ஏக்கர் வீட்டுமனை நிலங்களை கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு ஒரு சதுர அடி நிலத்திற்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என கூறி 236 நபர்களுக்கு மொத்தமாக 449 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.

ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு தொகையை வழங்காமல் காலம் கடத்தி வந்ததாக தெரிவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சென்னசமுத்திரம் பகுதியில் வசிக்கும் நில உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

Categories

Tech |