Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிலம் விற்பதாக கூறி…. 2 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

நிலம் விற்பதாக கூறி தொழிலதிபரிடம் பணம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடச்சூர் பாலமுருகன் நகரில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நூற்பாலை வைத்து நடத்தி வருகின்றார். இவரிடம் கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த 2 பேர் தங்களிடம் லக்கம்பட்டியில் ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் நல்ல கவுண்டம்பாளையத்தில் ஒரு நிறுவனம் இருப்பதாகவும், அதை விற்பனை செய்ய உள்ளதாக மகேஸ்வரனிடம் அவர்கள் 2 பேரும் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு வாங்கி கொள்ள மகேஸ்வரன் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து 1 கோடி ரூபாயை மகேஸ்வரன் அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தினார். அப்போது அவர்கள் 2 பேரும் சொத்தின் மீது உள்ள வங்கிக்கடன் செலுத்திவிட்டு தடையின்மை சான்று பெற்று தருவதாகவும், அதன்பின் மீதமுள்ள தொகையை தருமாறும் மகேஸ்வரனிடம் தெரிவித்தனர். ஆனால் வங்கியிலிருந்து அவர்கள் தடையின்மைச் சான்று பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் வங்கியின் ஏலத்துக்கு சென்று விட்டதாகவும், வேறு ஒருவர் அதை வாங்கியதாகவும் மகேஸ்வரனுக்கு தெரியவந்தது.

அதன்பின் மகேஸ்வரன் அவர்களிடம் சென்று தான் முன்பணமாக கொடுத்த 1 கோடி ரூபாயை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணத்தை கொடுக்காமல் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு கொடுத்தார். அதன்படி புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மகேஸ்வரனிடம் 1 கோடி ரூபாயை மோசடி செய்த 2 பேர் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |