Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. 22 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி நாட்டில் பர்டிசன் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று சுமார் 110 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 50-ற்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டு உள்ளனர். ஆனால் இந்த விபத்தில் சுமார் 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இருபாடுகளுக்குள் சிக்கிய சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |