பைசாபாத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை 6.14 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது பைசாபாத்திலிருந்து 117 கிலோமீட்டர் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.