Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நிழற்குடை அமைக்க வேண்டும்” சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தேவன் புதூர் பகுதியின் வழியாக பொள்ளாச்சி, ஆனைமலை போன்ற கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவன் புதூர் சந்திப்பிற்கு வந்து பொதுமக்கள் பழனி, உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நிழற்குடை இல்லாததால் நீண்ட நேரமாக நிற்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையோரம் நிற்கும் பொதுமக்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தேவனூர்புதூர் சந்திப்பில் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |