தமிழகத்தில் திமுக அரசின் தோட்ட தொழிலாளர் விரோத கொள்கைக்கு அதிமுகவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆயிரகணக்கான தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். ஒரு வேளை அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டும் என்று நினைத்தால் அங்குள்ள தொழிலாளர்களை வைத்து அங்கு இயற்கை வனமாக மாற்றுவதும், அவர்களை அங்கே தங்க வைக்க வழிவகை செய்வதும் தான் நியாயமாகும்.
அதனை விட்டுவிட்டு தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது, அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இதனையடுத்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வேலையை விட்டு அனுப்புவது என்பது இருப்பிடங்களை காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகும். எனவே முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையீட்டு டான்டீ நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கும்படி பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.