Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ பெருசு… பார்த்ததும் பதறிய விவசாயி… படம் பிடித்த வாலிபர்கள்…!!

கூத்தாண்டகுப்பம் பகுதியில் விவசாய நிலத்திற்குள் மலைப்பாம்பு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் அருள் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் இருக்கின்றது. இந்நிலையில் அருள் தன் விவசாய தோட்டத்திற்கு சென்றபோது நிலத்திற்குள் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் வாலிபர்கள் விவசாயி தோட்டத்திற்கு வந்து மலைப்பாம்பை தனது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை ஏலகிரி மலைக்காட்டில் கொண்டுபோய் விட்டனர்.

Categories

Tech |