விவசாய நிலத்தில் புகுந்த பாம்பை பிடித்து காட்டில் விட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப் பார்த்த விவசாயி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் ராஜா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராஜா நிலத்தில் இருந்த 10 அடி நீளமுடைய மலைப்பாம்பை கொண்டு சென்று காட்டில் விட்டுள்ளார்.