Categories
தேசிய செய்திகள்

நிலவில் புதிய ஆய்வு… அடுத்த ஆண்டு புறப்படும் இந்திய விண்கலம்… இஸ்ரோ தலைவர் தகவல் …!!!

நிலாவில் ஆய்வு செய்வதற்கு இந்தியாவின் மூன்றாவது விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “இஸ்ரோ “வின் பல விண்வெளி திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டமும சந்திராயன் நிலவுக்கு விண்கலன் அனுப்பப்படுவதும்  அடங்கியுள்ளது. விண்ணுக்கு ஏவப்பட இருந்த சந்திராயன்- 3 ராக்கெட் திட்டம் கடந்த ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டது. இதனைப்பற்றி இஸ்ரோ தலைவர் கே சிவன் கூறியது  “நாங்கள் சந்திராயன் 3 ராக்கெட் திட்டப்பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் இவற்றின் உள்ளமைப்புக்கள் அனைத்தும் சந்திராயன்-2 மாதிரியே இருப்பதாகவும் ஆனால் இதற்கு ஆர்பிட்டர் மட்டும் இருக்காது.

இதற்கு சந்திராயன் -2 உடன் ஏவப்பட்ட ஆர்பிட்டரே பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.இந்நிலையில் சந்திராயன்- 3 விண்கலம் அடுத்த  2022 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படுவதாகவும் அதற்கு நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.ககன்யான் திட்டத்தின்  கீழ் கடந்த ஆண்டு டிசம்பரில் விண்கலத்தை ஏவ  முடியாததால் இந்த ஆண்டு டிசம்பரில் அது நடைபெறுவதாகவும் இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆளில்லா விண்கலம் ஏவபடுவதாகவும் கூறினார். ககன்யன் பிரதானமான மூன்றாவது கட்டத்தில் 2022 ஆண்டில்  இந்திய வீரர்கள் 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படுவதாக எண்ணியுள்ளோம்.

விண்வெளிக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பயிற்சி பைலட் களும் தற்போது ரஷ்யாவில் பயிற்சி பெற்று கொண்டிருக்கிறார்கள். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக நிறைய தொழில்நுட்பங்களில்  கவனம் செலுத்தி உள்ளார்கள்.மேலும் அனைத்து தொழில்நுட்பங்களும் மிகச் சரியான முறையில் இருக்கின்றதா என உறுதி செய்யப்பட்ட பிறகே மனிதர்களை விண்வெளிக்க அனுப்புவதற்கான நாளை நாங்கள் முடிவ செய்வதாகவும் கூறினார்.

இந்நிலையில் வேற்று கிரகங்களில் லேண்டரை இறக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதற்காக சந்திராயன்- 3 விண்கலம் இஸ்ரோ வைப் பொறுத்தவரை முக்கிய பங்கு வகித்துள்ளது. சந்திராயன்-2 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஏவப்பட்டது இதனுடன் சந்திரனின் அறியப்படாத தென் துருவப் பகுதியில் ஒரு ரோவரை இறக்கவும் திட்டமிட்டருந்தது. ஆனால் அந்த ஆண்டு செப்டம்பர் 7 நிலவின் பரப்பில் மோதிய விக்ரம் லேண்டரல் முதல் முயற்சியிலேயே நிலவு பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கும் இந்தியாவின் கனவு தகர்ந்து போய்விட்டது.

Categories

Tech |