Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடுகிடுவென சரிந்த விலை… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… நீலகிரியில் ஏற்பட்ட அவலம் ….!!

நீலகிரியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், புரூக்கோலி, பூண்டு போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து மலை காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது. இதுபற்றி வியாபாரிகள் கூறும் பொழுது பீன்ஸ், புரூக்கோலி,  பூண்டு, பஜ்ஜி மிளகாய், கேரட் போன்ற பொருட்கள் ஒட்டன்சத்திரம், மைசூர், தாளவாடி, பெங்களூரு, டெல்லி மற்றும் ஓசூர் போன்ற இடங்களிலிருந்து ஊட்டிக்கு டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இதனால் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.

இந்நிலையில் ஒரு கிலோ புரூக்கோலி ரூ200 முதல் ரூ250 வரை விற்பனையான  நிலைமாறி தற்போது ரூ20 முதல் ரூ25 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நீலகிரியில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு தனிச்சிறப்பு இருந்தாலும், வெளியிடங்களிலிருந்து அதிகளவில் காய்கறிகள் வருவதால் அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் உருளைக்கிழங்கு ரூ37, பட்டாணி ரூ60, முள்ளங்கி ரூ10, பீட்ரூட் ரூ38, பீன்ஸ் ரூ20, கேரட் ரூ12 என்ற விலைகளில் விற்பனை செய்படுவதால் போதிய வருமானமின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |