Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வழங்க வேண்டும்…. பெண்கள் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தொழிலாளிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காத நிறுவனத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொம்மேஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி அமைந்திருக்கிறது. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஆட்களை குறைத்துள்ளனர். இந்நிலையில் பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையின் காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கம்பெனி நிர்வாகத்தை முறையிட்டனர். அதன்பின் நிர்வாகத்தினர் கால அவகாசத்திற்குள் தொகையை வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் நிலுவைத் தொகையை நிறுவனம் வழங்காமல் இருந்துள்ளது. இதனையடுத்து கோபமடைந்த 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |