கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியபோது இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. இதனால் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி கிராமப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.
மேலும் தினமும் 2 கிராமங்களில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தடுப்பூசிகள் இருப்பதை பொறுத்து பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.