Categories
உலக செய்திகள்

நிம்மதியா தூங்கணுமா? வேணாம்மா?… அமெரிக்காவை கண்டித்த வடகொரியா அதிபரின் தங்கை… பரபரப்பு…!!!

வடகொரிய   அதிபரின் தங்கை   அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்த  சம்பவம்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

உலக நாடுகளில் அமெரிக்கா வல்லரசு நாடாக திகழ்கிறது. அதனை போலவே  மிகவும் மர்மம் நிறைந்த நாடாக வட கொரியா உள்ளது. இந்ந இருநாடுகளுக்கும் , பல ஆண்டுகளாகவே பிரச்சினைகள் நிலவி வருகிறது .அதனால் இருநாடுகளும் எப்போது மோதிக் கொள்ளும் என்ற அச்சம் இருக்கும் . இந்நிலையில் வடகொரியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் கடற்படை கூட்டு பயிற்சி வரும் நாட்களில் நடைபெறயுள்ளாதால்  அமெரிக்க அதிகாரிகள் தென்  கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

தற்போது வடகொரிய அதிபராக கிம் ஜங் உன்  உள்ளார். அவரது தங்கையான கிம் யோ ஜாங்  அவருக்கு அடுத்தபடியாக நிர்வாக பொறுப்புகளை செய்துவருகிறார் . மேலும் அந்நாட்டில் அதிகாரம் படைத்த தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும்  திகழ்ந்து வரும் இவர்  அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளும் அமெரிக்கா நிம்மதியாக உறங்க வேண்டும் என்றால் எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று கூறி உள்ளார். இந்த பரபரப்பான சம்பவம் பிற உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Categories

Tech |