நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியார் கலந்து கொள்ளாதது குறித்து தொலைக்காட்சி பிரபலம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரித்தானியா தொலைக்காட்சி பிரபலமான பியர்ஸ் மோகன் அரசக் குடும்பம் குறித்து தமது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக இவ்விவகாரங்களில் பல முறை சிக்கியுள்ளார். இருப்பினும் தமது கருத்துக்களை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியார் கலந்து கொள்ளாதது அனைவருக்கும் அவரின் உடல்நிலை சரியில்லையா என்ற சந்தேகத்தையும் கவலையும் அளித்துள்ளது.
ஏற்கனவே அதிகாரிகள் இது தொடர்பான தகவல்களை அறிக்கை மூலமாக வெளியிட்டனர். அதில் ‘மகாராணியார் முதுகில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதால் நினைவேந்தல் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள முடியாது என்றும் இது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கும்’ என்றும் தெரிவித்திருத்தனர். குறிப்பாக கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையாக மகாராணியார் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்துள்ளார். இவருக்கு பதிலாக இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் மிடில்டன் உடன் வந்து நினைவு மண்டபத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தொலைக்காட்சி பிரபலமான பியர்ஸ் மோர்கன் மகாராணியார் நிலைமை குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக நம்மிடம் கூறப்பட்ட தகவலை விடவும் அவரின் நிலைமை மோசமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் மகாராணியார் உடல்நிலை குறித்து நம்மிடம் கூறப்படாத அளவிற்கு ஓன்று இருக்கிறது. அது அரண்மனை வட்டாரங்கள் நம்மிடம் கூறுவதை விடவும் தீவிரமானது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.