கியூபாவின் தலைநகரில் அந்நாட்டின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினத்தை மையமாகக்கொண்டு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.
கியூபாவின் முன்னாள் அதிபராக பிடல் காஸ்ட்ரோ என்பவர் இருந்துள்ளார். இவருடைய 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் மிகவும் அற்புதமான அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் முன்னாள் அதிபரான ஃபிடல் காஸ்ட்ரோ பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.
அதோடு மட்டுமின்றி கியூபாவின் தலைநகரான ஹவானாவில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சீன அதிபர் பரிசளித்த அந்நாட்டின் முன்னாள் அதிபருடைய மார்பளவு சிலையும் இடம்பெற்றுள்ளது.