பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சி பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆக்னல் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஆக்னல் செட்டிகுறிச்சி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ஆக்னலை அழைத்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பிறகு காவல்துறையினர் ஆக்னல் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஆக்னலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.