சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 14,164 பேர் குணமடைந்துள்ள நிலையில் 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சென்னையில் மட்டும் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 77 வயது முதியவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.