Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழப்பு..!!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண் நபர் உயிரிழந்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் மரணமடைந்தார். சென்னை அசோக்நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். மொச்சுத்திணறல் கொரோனாவின் அறிகுறி என்பதால் அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். பென்சில் பேக்டரியை சேர்ந்த 50 வயது பெண், தண்டலத்தை சேர்ந்த 48 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, சாத்தாங்காட்டை சேர்ந்த 64 வயது முதியவர், ராயபுரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, திருவொற்றியூரை சேர்ந்த 49 வயது ஆண், கொளத்தூரை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.901% ஆக உள்ளது. இந்த நிலையில், இன்றும் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Categories

Tech |