ஹாங்காங்கில் தீவிரவாதத்தில் ஈடுபட முயற்சித்த பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்துள்ளது. இதையடுத்து சீனா கடந்த வருடம் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தினை போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாணவர் விடுதி ஒன்றில் வெடிகுண்டுகளை தயார் செய்ய முயற்சித்த ஆறு மாணவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் குப்பை தொட்டிகள், ரயில் பாதைகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகளை பொருத்த முயற்சித்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.