இந்தியாவில் அக்டோபர் மாதம் 5g சேவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த சேவை ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடங்கிய நிலையில் Vi இந்த சேவையை தொடங்கியுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் மொத்த இந்தியாவில் இந்த சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு முக்கியமாக தேவைப்படுது ஒரு 5g சேவை வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டுமே உங்களால் இந்த சேவையை பயன்படுத்த முடியும். இந்த 5g சேவை தொடங்குவது பற்றி இங்கு பார்ப்போம்.
- முதலில் உங்கள் போனில் settings கிளிக் செய்து அதில்“Wifi and Network“செல்லவும். இது ஒவ்வொரு நிறுவன போன்களுக்கும் மாறுபடும்.
- அதில்“Preferred network type”என்கிற ஆப்ஷன் சென்று அதில்“5G/4G/3G/2G”ஆகிய ஆப்ஷன்களில் நீங்கள் 5G ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும். இதன்மூலம் உங்களின் போன் 5G சேவைக்கு மாறும்.
- பின்னர் சிறிது நேரம் காத்திருக்கவும். அதற்குள் ஏர்டெல் உங்களின் இடத்தில் 5G சேவை உள்ளதா என்பதை கண்டறிந்து 5G சேவையைActivateசெய்யும்.
- அப்படி 5G சேவை உங்கள் இடத்தில் இருந்தும் அதற்கு மாறவில்லை என்றால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனைRestartசெய்யவேண்டும். இல்லையென்றால் இன்னொரு வழியும் உள்ளது.
- உங்களின் போனில் உள்ள Dialer App திறந்து அதில்*#*#4636#*#*என்று டைப் செய்யவும். பின்னர் ஒரு பேஜ் திறக்கும். அதில்“Phone Information”சென்று அதன் கிழே உள்ள“Set preferred network type”கிளிக் செய்யவும்.
- அதில்“NR only”or“NR/ LTE”கிளிக் செய்யவும்
மேலும் தற்போது ஏர்டெல் 5g சேவை இந்தியாவில் ஐபோன்களுக்கு இல்லை. இதற்காக ஆப்பிள் நிறுவன அப்டேட் அனுப்பியவுடன் இந்த பயிற்சி தொடங்கப்படும். அதனை தொடர்ந்து எதில் நிறுவனம் அதன் 5g சேவையை Airtel 5G Plus என்று அழைக்கப்படுகிறது. இந்த சேவை முதல் கட்டமாக 8 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முக்கிய நகரங்களாக உள்ள டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், சிலிக்குரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகியவைகள் ஆகும். இந்த வருட இறுதியில் இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் இந்த 5ஜி சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.