Categories
தேசிய செய்திகள்

அரசியலுக்கு தாவும் ஹர்பஜன் சிங்?…. நிறைய ஆஃபர் வந்திருக்காம்…. அவரின் விருப்பம் என்ன?….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஒரு காலத்தில் ஹர்பஜன் சிங் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டதும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங், ஹர்பஜன் சிங்குடன் இருப்பது போன்ற புகைப்படத்தை போடவே ஹர்பஜன் காங்கிரஸுக்குப் போகப் போகிறாரா என்ற பரபரப்பு தகவல் வெளிவந்தது.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கருத்து கூறியயாவது, எனக்கு பல்வேறு கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்துள்ளது. ஆனால் எனது எதிர்காலம் தொடர்பாக நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும் கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். மக்களுக்கு என்னைத் தெரிவதற்கு கிரிக்கெட்தான் முக்கிய காரணம். அரசியலைப் பொறுத்தவரையிலும் என்ன நடந்தாலும் உங்களிடம் சொல்லிய பிறகே செய்வேன். உண்மையைச் சொல்லப்போனால் நான் அரசியல் பற்றி சிந்திக்கவே இல்லை. ஆகவே உட்கார்ந்து மெதுவாக யோசித்து புத்திசாலித்தனமாக முடுவெடுக்க வேண்டும்.

அரசியல் என்பது மிகப் பெரிய பொறுப்பு ஆகும். அதை அரை மனதோடு நான் செய்வதற்கு விரும்பவில்லை” என்று கூறினார். சித்துவுடனான சந்திப்பு தொடரப்பாக ஹர்பஜனிடம் கேட்டபோது, அது ஒரு சாதாரண சந்திப்புதான். தேர்தல் அருகே உள்ளதால் இந்த சந்திப்பை வேறு மாதிரியாக பார்க்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் அரசியலில் சேர்ந்தால் எல்லோருக்கும் சொல்லிய பிறகே செய்வேன் என்றார் ஹர்பஜன் சிங் கூறினார்.
2019 ம் ஆண்டே லோக்சபா தேர்தலில் அவர் அரசியலுக்கு வரப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது அவர் வரவில்லை. தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று உள்ளதால் மீண்டும் அவர் தொடர்பான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Categories

Tech |