இளையான்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதிரியாராக பணிபுரிந்த ஸ்டேட் சுவாமி சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சரியாக குடிநீர் வழங்காததால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு தாலுகா பொருளாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். அதன்பின் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.