பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி ஆகும். இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை டிச.30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை த்ரிஷா “எதற்கும் பயப்படாத கதாபாத்திரம் என்பதால் “ராங்கி” என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நான் ஆக்சன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன்.
கொரோனாவுக்கு பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் அதிகரித்துள்ளது. நான் அரசியல் கட்சியில் இணையப்போவதாக தவறான தகவல்கள் வெளியாகிறது. எனக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. எனக்கு தல, தளபதி இருவரையும் பிடிக்கும். அவர்களின் திரைப்படங்களை விரும்பி பார்ப்பேன். திருமணம் எப்போது என்ற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை” என அவர் தெரிவித்து உள்ளார்.