Categories
மாநில செய்திகள்

நீங்கள் 100 யூனிட் இலவச மின்சாரம் பெற?…. உடனே இந்த வேலையை முடிங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் நுகர்வோருக்கு மட்டும் மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (TANGEDCO) நுகர்வோரின் ஆதார் அட்டையை அவர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க துவங்கியுள்ளது. தற்போது இதுகுறித்த புது புகார்கள் வெளியாகி வருகிறது.

உண்மையில் TANGEDCO அலுவலகங்களில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாக புகார் வருகிறது. இதன் காரணமாக முதலில் சென்னையில் அமைக்கப்பட்டிருந்த கவுன்டரை ஆய்வு மேற்கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். அத்துடன் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக்கூடாது என்று மின்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |