தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளை விமர்சித்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் தனது அதிகாரத்தை மீறி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றி செயல்படுவதாகவும் திமுக, காங்கிரஸ் முன்னிட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து தென்னிந்தியாவிற்கான பாஜகவை 2024 தேர்தல் வியூகம் என்ற ட்விட்டர் ஸ்பெஷலில் கலந்து கொண்டார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகளை சாராத அரசியலமைப்பு பதவியான ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை பாஜகவுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டது சர்ச்சையாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டம் 152 முதல் 162 வரை ஆளுநர் பற்றிய விஷயங்களை குறிப்பிடுகின்றன. 158வது பிரிவின் படி ஆளுநராக ஒருவர் பதவி வகிக்க சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி பாராளுமன்றம், சட்டமன்றத்தின் இரு அவைகளில் உறுப்பினராக இருக்கக் கூடாது. அதன் மூலம் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதை தெளிவாகிறது. ஆளுநரை அதிகாரங்கள் பற்றி உச்சநீதிமன்ற பலமுறை தெரியப்படுத்தி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து துறை வாரியாக வரையறு செய்யப்பட்டிருக்கிறது, என்றாலும் சில ஆளுநர்களின் செயல்பாட்டினால் அவர்கள் அரசியல்வாதியா என்ற கேள்வி எழுகிறது. இதனையடுத்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளை பற்றி தொடர்ந்து விமர்சித்து பேசி வரும் தமிழிசை சௌந்தரராஜன் அரசியலமைப்பு சட்ட பதவியான ஆளுநர் பொறுப்பை வகிப்பவர், கட்சி சார்பின்றி செயல்பட வேண்டும் என்ற மரபை மீறி செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.