Categories
உலக செய்திகள்

நீங்கள் நிம்மதியாக 5 மணி நேரம் உறங்கணுமா?…. டூர் ஏஜென்சியின் புதிய அறிமுகம்….!!

நிம்மதியாக உறங்க 5 மணிநேரம் போகக்கூடிய பயணத்திற்கு டூர் ஏஜென்சி ஒரு டபுள்-டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் ஒரு உள்ளூர் டூர் ஏஜன்சி எந்த தொல்லையும் இன்றி அமைதியாக உறங்குவதற்கு தனிப்பட்ட ஒரு பேருந்து சர்வீசைத் தொடங்கியுள்ளது. இதில் 52 மைல் வரை செல்லும் இந்த பயணம் ஹாங்காங் மக்கள் நிம்மதியாக எந்த தொந்தரவும் இன்றி உறங்க உதவியாக இருக்கிறது. இதனிடையில் மக்கள் நீண்ட நேரம் செல்லும்போது சிறிது நேரம் நம்மை அறியாமலேயே உறங்குவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் நிம்மதியாக உறங்குவதற்காகவே 5 மணிநேரம் செல்லக்கூடிய பயணத்துக்கு டூர் ஏஜென்சி ஒரு டபுள் டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் லோயர் டெக்கில் உள்ள இருக்கைகளுக்கான டிக்கெட்டின் விலை $12 மற்றும் அப்பர் டெக்கில் உள்ள இருக்கைகளுகான டிக்கெட்டின் விலை $51 ஆகும்.

“Bus ride to nowhere” எனும் இந்த திட்டத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உளு டிராவல்சின் தலைவர் ஃபிராங்கி சௌவ் அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வாறு பயணிகள் உறங்குவதற்கு தடை ஏற்படக்கூடாது என்ற வகையில் குறைவான டிராபிக் சிக்னல் இருக்கும் ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார். இது தொடர்பாக ஃபிராங்கி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது “இந்த திட்டத்தை 2 வகையான பயணிகளுக்காக அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். அதாவது பலரும் இன்சோம்னியா என்ற உறக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களுக்கு தேவைப்படும் போது சில மணி நேரங்களாவது உறங்குவதற்கு அமைதியான இடம் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக உறங்குவதற்கு இந்த பேருந்து டூர் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹாங்காங்கை சுற்றி பார்க்க விரும்புபவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம். இதனிடையில் அனைவரும் வீட்டில் சரியாக உறங்காமலும், மன அழுத்தத்தோடும் இருக்கின்றனர். இதனால் இந்த ட்ரிபில் அவர்கள் நிம்மதியான உறக்கத்தை பெறலாம். இவ்வாறு 5 மணிநேரம் உறங்குவதற்கு அல்லது அமைதியான பயணத்திற்கு $12 கட்டணம் செலுத்துவார்கள் என்ற கேள்வியும் எழும். ஆனால் ஹாங்காங்கில் அறிமுகமாகியுள்ள சில மணி நேரம் அமைதியாக அல்லது நிசப்தமான இடத்தில் நிம்மதியாக இருப்பதற்கான கட்டணம் செலுத்துதல் புதிதல்ல. இதற்கு முன்பாக தென் கொரிய நாட்டில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகளாக “seeking solace in cafes” என்ற கஃபேக்களில் தனிமையாக இருக்கும் திட்டங்கள் உள்ளன. டைம் ஸ்லாட்டுகள் முறையில் நீங்கள் முன்பதிவு செய்யலாம். மேலும் ஜப்பானிலும் சைலண்ட் கஃபேக்கள் மிகவும் பிரபலமானது ஆகும். ஆகவே பலரும் சில நிமிடங்களாவது தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

Categories

Tech |